

கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் மியான்மர் நாட்டு அகதி களை தங்க வைக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். அவர்களை சமாதானப் படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அகதிகள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம் பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் சோமா நகரில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மியான்மர் நாட்டை சேர்ந்த 63 அகதிகள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி பகுதியில் வேலை வாங்கி தருவதாக சிலர் கூறியதால், மணலி சென்று வாடகை வீட்டில் தங்கினர்.
அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை போலீஸார் இரவோடு இரவாக, அகதிகளை ஏற்கெனவே தங்கியி ருந்த தையூர் பகுதியில் விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்த செங்கல்பட்டு கோட் டாட்சியர் பன்னீர் செல்வம் தலைமையிலான வருவாய்த் துறை யினர் அகதிகளை தற்காலிகமாக தையூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
ஆனால், ‘அகதிகள் தங்க வைக்கப்படுவதால் தங்களின் சுதந் திரம் பாதிக்கப்படுதோடு, அவர்க ளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ள தாக’ தையூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், செங்கல் பட்டு கோட்டாட்சியர், கிராம மக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரி வித்ததாவது: தையூரில் உள்ள அகதிகள் ஏற்கெனவே அப்பகுதி யில் வசித்து வந்தவர்கள்தான். தற்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும், அகதிகள் ஒவ்வொரு வரிடமும் அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து பதிவு செய்யுமாறு வருவாய்த் துறைக் கும், அவர்களது செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு மாவட்ட காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தித் தருமாறு அகதிகள் கோரியுள்ளனர். அதற்கான வாடகையை செலுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித் துள்ளனர். அதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் உள்ளூர் மக்களை சமாதானப் படுத்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அகதி களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.