கரோனா பரவல் எதிரொலி: கோவையில் வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிரொலியாக கோவையில் வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு செய்துள்ளன. இதேபோல, திருப்பூரில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வணிக நிறுவனங்கள் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 14 வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமையில் கோவையில் இன்று (ஜூன் 22) நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கோவையில் பைப்புகள், எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்னிச்சர்கள், டெக்ஸ்டைல் இயந்திரங்கள், நூற்பாலைகளுக்கான உபகரணங்கள், ஹார்டுவேர்கள், பேரிங்குகள், கழிப்பறைப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், தங்க நகைகள், மரச்சாமான்கள், காகிதப் பொருட்கள், ப்ளைவுட் பொருட்கள், இயந்திரத் தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இன்று (ஜூன் 22) முதல் ஜூலை 6-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்து, விற்பனை செய்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூரில் காலை 7 மணி முதல்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம் திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.கோவிந்தசாமி தலைமையில் திருப்பூரில் இன்று நடைபெற்றது. திருப்பூரில் வரும் ஜூலை 1-ம் தேதி வரை காலை 7 மணியில் இருந்து மாலை 5 வரை மட்டுமே கடைகளைத் திறந்து, வியாபாரம் செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in