

புதுச்சேரிக்கு வந்த நடிகர் விஷால் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் சரத் குமார் மற்றும் விஷால் அணியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனி யார் உணவக அரங்குக்கு நேற்று வந்த நடிகர் விஷால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடக நடிகர்களை சந்தித்து பேசினார்.
அவர்களிடம் தென்னிந்திய நடிகர் சங்கத் தோ்தலில் போட்டி யிடும் தனது அணியினருக்கு வாக் களிக்க வேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின்போது விஷால் நற்பணி இயக்கத்தினர் உடனிருந்தனர்.