Published : 22 Jun 2020 07:23 AM
Last Updated : 22 Jun 2020 07:23 AM

வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பலராமன் கரோனா பாதிப்பால் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

வட சென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் (77), கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கடந்த 1989 முதல் 2009 வரைதிமுக வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் எல்.பலராமன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர். தற்போது திமுக தணிக்கை குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிரஅரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். சென்னை அண்ணா நகரில்வசித்து வந்த அவருக்கு 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை மோசமடையவே நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை அரும்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

எல்.பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்செய்தியில், ‘‘கருணாநிதியின் கண்அசைவின் பொருளை புரிந்துகொண்டு, வில்லில் இருந்து விடுபடும் கணையாக களப்பணியாற்றியவர் எல்.பலராமன். அவரை ‘பலே’ராமன் என்று கருணாநிதி பாராட்டியுள்ளார். பலராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x