Published : 22 Jun 2020 07:22 AM
Last Updated : 22 Jun 2020 07:22 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 - வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்குச் சென்று நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள்.

மாற்றுத் திறனாளிகள், நிவாரணத் தொகை வழங்க உள்ள அலுவலரிடம் விநியோக படிவத்தில் உள்ள விவரங்களை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் அசலைக் காண்பித்து நகலைநிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரணத் தொகையை பெற்று கொள்ளலாம். நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் இரண்டு ரூ.500நோட்டுகளையே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வுதவி மறுக்கப்படும் நிலையில் அல்லது கிடைக்கப் பெறவில்லை எனில் 18004250111 என்ற மாநில அளவிலான உதவி மைய எண்ணை மாற்றுத் திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம்.

நிவாரணம் வழங்குவதில் ஏதேனும் முறைகேடு தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x