Published : 21 Jun 2020 07:48 PM
Last Updated : 21 Jun 2020 07:48 PM

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டிக்கு வருவோர் குறித்து தகவல் அளிக்க வேண்டும்: ஆணையாளர் வேண்டுகோள்

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டிக்கு வருவோர் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

கோவில்பட்டி நகர் பகுதிக்கு தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் மக்கள் வந்து கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலோ அல்லது தங்கள் பகுதிகளிலோ வெளிமாவட்ட, மாநிலங்களிலிலிருந்து வரும் நபர்கள் குறித்த தகவல்களை இந்நகராட்சி அலுவலக தொலைபேசி எண்.04632-220925ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், நகர்பகுதிகளில் செயல்படும் மொத்த விற்பனை கடைகள், சில்லறை விற்பனை கடைகள், சாலையோர கடைகள், உணவகங்கள், ஜவுளிக்கடை, நகைக்கடை, சலூன் கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்.

தினமும் 3 முறை கிருமிநாசினி கொண்டு தெளிக்க வேண்டும். குளிர்சாதன வசதி பயன்படுத்தக்கூடாது.

கடையில் பணி செய்யும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டம் கூடுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

இவற்றை கடைபிடிக்கப்படாவிட்டாலோ, விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ தமிழ்நாடு பொது சுகாதாரச்சட்டம் 1939, தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்; சட்டம் 1920ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x