Published : 21 Jun 2020 07:02 AM
Last Updated : 21 Jun 2020 07:02 AM

இன்று சர்வதேச யோகா தினம்: மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கரோனா தடுப்புக்கும் உதவும் யோகா

புதுச்சேரி அரசு சார்பில் வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை பெறு வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அங்குள்ள மருத்துவர் ச.மகேஸ்வரன் கூறி யது: அரசின் இந்த யோகா பயிற்சி மையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தனர். கரோனா ஊரடங்கால் தற்போது குறைந்த அளவிலேயே இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று ஏற் படாமல் தடுப்பதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறை நமக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவதாகவே உள்ளது. மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்.

கரோனா வைரஸ் தொற் றைத் தடுப்பதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன்தடுப்பு நடவடிக்கை ஆகும். யோகாசனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சிகள் மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி தசைகளை வலுவாக்குவ தோடு கிருமி வளரும் சூழலை நிச்சயம் குறைக்கும். எனவே இன்றைய காலகட்டத்தில் கரோனா வைரசுக்கு எதிரான ஒரு போராட்ட உத்தியாக அனைவரும் யோகப் பயிற்சியைக் கைக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னெடுப்பால் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி(இன்று) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகி றது. கரோனா பெருந்தொற்று சூழலில், பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத நிலையில், ‘வீட்டில் யோகா- குடும்பத்தாருடன் யோகா’ என்பதே இந்த ஆண்டின் கொண் டாட்ட முறையாகி உள்ளது.

நாமும் யோகாவை கற்போம், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ளுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x