Published : 21 Jun 2020 06:55 AM
Last Updated : 21 Jun 2020 06:55 AM

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ‘பேவிபிரவிர்’ மாத்திரை; மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி: ஒரு மாத்திரை விலை ரூ.103-க்கு நிர்ணயிக்கப்பட்டு அறிமுகம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு பலன் தரும் ‘பேவிபிரவிர்’ மாத்திரையை கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ)ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு மாத்திரை ரூ.103-க்கு விற்கப்பட உள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ‘பேபிபுளூ’ எனப்படும்வைரஸ் காய்ச்சலுக்கான ‘பேவிபிரவிர்’ என்றமாத்திரையை தயாரிக்கிறது. இந்த மாத்திரையை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அளித்ததில் பலன் தெரிந்துள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை மற்றும் அதற்கு அடுத்த கட்டநிலையில் உள்ளானவர்களுக்கு பேவிபிரவிர் மாத்திரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த மாத்திரையை கரோனா பாதித்தவர்களுக்கு பரிந்துரைக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) கிளென்மார்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு மாத்திரைகள் இதுவரை மருத்துவரீதியாக தீர்மானிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் பேபிபுளூ காய்ச்சலுக்கு பலன் தரும் பேவிபிரவிர் மாத்திரைக்கு தற்போது டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கைநாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும்சூழலில் இந்த மாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக நிறுவனத்தின் தலைவரும்நிர்வாக இயக்குநருமான கிளென் சல்தானா தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் இந்த மருந்து, பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர்குறிப்பிட்டார். மருத்துவரீதியாக இந்த மாத்திரை சோதித்து பார்க்கப்பட்டு சிறந்த பலனைஅளித்துள்ளது என்றும் இது மாத்திரை வடிவில் இருப்பது அவர்களுக்கு சாதகமான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்குஉள்ளானவர்களுக்கு மருந்துகள் அனைத்தும் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. சிலமருந்து நரம்புகளில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மாத்திரை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சல்தானா குறிப்பிட்டார். மருத்துவரின்பரிந்துரை அடிப்படையில் இந்த மாத்திரை வழங்கப்படும்.

ஒரு மாத்திரை விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளன்று 1,800 எம்ஜி திறன் கொண்ட மாத்திரைகள் 2 வேளை சாப்பிட வேண்டும். அதன்பின், 2-ம் நாளில் இருந்து 800 எம்ஜி மாத்திரைகளை தினசரி 2 வீதம் 14 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதயபாதிப்பு நோயாளிகள் ஆகியோரில் கரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மாத்திரை பலன் தந்துள்ளது. நான்கே நாளில் வைரஸ் தீவிரம் குறைந்துள்ளது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x