சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: பால் விநியோகம், மருந்துக் கடை, மருத்துவமனைகளுக்கு அனுமதி

முழு ஊரடங்கின் 2-ம் நாளான நேற்று பொதுமக்கள், வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட அண்ணாசாலை. (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது)படம்: ம.பிரபு
முழு ஊரடங்கின் 2-ம் நாளான நேற்று பொதுமக்கள், வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட அண்ணாசாலை. (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது)படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று எந்த தளர்வும் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால் விநியோகம் மருந்துக் கடை, மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புஅதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் வரும் 30-ம் தேதி வரைமுழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 4 மாவட்டங்களில் அப்பகுதிகளின் எல்லைகள்மூடப்பட்டு காவல் துறையினர்அதிக அளவில் களமிறக்கப்பட்டு,சோதனைகள் அதிகரிக்கப்பட்டதால், வாகனங்களின் நடமாட்டம் மிகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நேற்று (ஜூன் 20)நள்ளிரவு 12 மணி முதல் நாளை (ஜூன் 22) தேதி காலை 6 மணிவரை எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, இன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசரம் மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதியில்லை. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் இன்று கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மதுரை உள்ளிட்டசில மாவட்டங்களிலும் தொற்றுஅதிகரித்து வருவதால், அந்தந்தமாவட்டங்களும் தளர்வுகளைகுறைத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in