Published : 14 Sep 2015 11:56 AM
Last Updated : 14 Sep 2015 11:56 AM

டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சி யும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

திமுக முப்பெரும் விழாவை யொட்டி அக்கட்சியின் மருத்துவர் அணி சார்பில் சென்னை கொளத்தூர் கம்பர் தெருவில் உள்ள டேனிஸ் பள்ளி, பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் கூட் டுறவு திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை, அகர்வால் மற்றும் எம்.என். கண் மருத்துவ மனைகள், கற்பக விநாயகா பல் மருத்துவமனை ஆகியவை ஏற்பாடு செய்திருந்த இந்த மருத்துவ முகாம்களை கொளத் தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக பொருளா ளருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த முகாமில் பொது மருத்துவம், வயிறு, குடல், சிறுநீரகம், இதயம், நரம்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், பல், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், நீரழிவு, எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி, அல்ட்ராசவுண்டு, எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவ முகாமின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்ட ஸ்டாலின் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் பேட்டி அளித்துள்ளார். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் இருப்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர், சாக்கடை நீர் தேங்காமல் இருக்க கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த வேண்டும். கொசுக்களை ஒழிக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசா ரணை நடத்தி வருகிறார். தனது விசாரணைக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசின் செயலற்ற தன்மையையே இது போன்ற சம்பவங்கள் காட்டு கின்றன. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

திமுக சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன், மருத்துவர் அணியின் தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர் என்.எஸ்.கனிமொழி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x