Published : 19 Jun 2020 03:05 PM
Last Updated : 19 Jun 2020 03:05 PM

வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த தமிழர்கள்: உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கு உதவிய வைகோ

வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உதவியுள்ளார்.

இதுதொடர்பாக, மதிமுக தலைமைக்கழகம் இன்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை:

"கோவில்பட்டி அப்பனேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிரகாஷ் திருப்பதி ஓமன் நாட்டில் உயிரிழந்தார் என்ற தகவல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர், வெளியுறவுத் துறை மூலமாக உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

பிரகாஷ் திருப்பதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பிரகாஷ் திருப்பதி உடல் நேற்று (ஜூன் 18) காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றனர்.

பிரகாஷ் திருப்பதி மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என ஓமனில் உள்ள இந்தியத் தூதர் வைகோவுக்கு விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.

அதேபோன்று, ஓமன் நாட்டில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, 12 நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். வைகோ முயற்சியால், அவரது உடல் நேற்று மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.

பெரம்பலூர் மாவட்டம் - குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அபுதாபியில் இயற்கை எய்தினார். அவரது உடலைக் கொண்டு வருவதற்கும் வைகோ முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மதுரைவீரன் உடல் ஜூன் 26 ஆம் தேதி சென்னை வருகின்றது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x