கரோனா தொற்று அதிகரிப்பு: புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து

புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து
புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து
Updated on
1 min read

கரோனா தொற்று அதிகரிப்பால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரும், சட்டப்பேரவைக் காவலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மக்கள் வருகையும் அதிக அளவில் இருந்தது. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் கரோனா பரவலுக்கு வாய்ப்பாக அமையும் சூழல் இருந்தது.

இதையடுத்து மக்கள் வருவதைக் கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கரோனா பரவலைத் தடுக்க சட்டப்பேரவையில் பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு இன்று (ஜூன் 19) முதல் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார், சட்டப்பேரவைக் காவலர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

சட்டப்பேரவையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் இருக்கும்போது அவர்கள் அனுமதி கிடைத்தால் மட்டுமே அனுமதி தரப்படுகிறது. சட்டப்பேரவைக்குள் வருவோரின் பெயர், விவரம் பதிவு செய்யப்படுகிறது. முகக்கவசம் அணிந்து வருவோருக்கு கிருமி நாசினி தரப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து மக்கள் பணியாற்றலாம். சட்டப்பேரவைக்கு அவசியமின்றி வர வேண்டாம்" என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. .இதையடுத்து சட்டப்பேரவைப் பகுதி முழுவதும் வெறிச்சோடியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in