Published : 18 Jun 2020 03:35 PM
Last Updated : 18 Jun 2020 03:35 PM

தமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு  கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ் நியமனம்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு கண்காணிப்பு அலுவலர்களாக தமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு 33 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டுக்கு முதன்மைச் செயலர் உதயச்சந்திரனும், காஞ்சிபுரத்திற்கு சுப்ரமணியன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சென்னைக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு அதிகாரி மற்றும் மண்டல வாரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இது தவிர 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்டங்களும் விபரம் வருமாறு:

1. அரியலூர் - சரவண வேல்ராஜ்
2. பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
3. கோயம்பத்தூர் - ஹர்மந்தர் சிங்
4. நீலகிரி - சுப்ரியா சாஹு
5. கடலூர் - கஹந்தீப் சிங் பேடி
6. தர்மபுரி - சந்தோஷ் பாபு
7. திண்டுக்கல் - மங்கத்ராம் ஷர்மா
8. ஈரோடு - காகர்லா உஷா
9. கன்னியா குமரி - ஜோதி நிர்மலா சாமி
10. கரூர்- விஜயகுமார்
11. திருச்சி - ரீத்தா ஹரீஷ் தாக்கர்
12. கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
13. மதுரை - தர்மேந்திர பிரதாப் யாதவ்
14. புதுக்கோட்டை - ஷாம்பு கல்லோலிகர்
15. தஞ்சாவூர் - பிரதீப் யாதவ்
16. நாமக்கல் - தயானந்த் கட்டாரியா
17. சேலம் - நஸிம்முதன்
18. விருதுநகர் - மதுமதி
19. தூத்துக்குடி - குமார் ஜெயந்த்
20. நாகப்பட்டினம் -- முனியநாதன்
21. ராமநாதபுரம் - சந்திர மோகன்
22. சிவகங்கை - மஹேஷ் காசிராஜன்
23. திருவாரூர் - மணிவாசன்
24. தேனி - கார்த்திக்
25. திருவண்ணாமலை - தீரஜ்குமார்
26. நெல்லை - அபூர்வா
27. திருப்பூர் - கோபால்
28. வேலூர் - ராஜேஷ் லக்கானி
29- விழுப்புரம் - முருகானந்தம்
30. கள்ளக்குறிச்சி - நாகராஜன்
31. தென்காசி - அனுஜார்ஜ்
32. திருப்பத்தூர் - ஜவஹர்
33. ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா
மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x