அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் இருந்து 56 பேர் விடுதலை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞர்களுடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞர்களுடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

Updated on
1 min read

மதுரை: அலங்​காநல்​லூர் ஜல்​லிக்​கட்டு போராட்ட வழக்​கி​லிருந்து 56 பேரை விடு​தலை செய்து மதுரை மாவட்ட நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. ஜல்லிக்கட்டு விளை​யாட்​டில் மாடு​கள் துன்​புறுத்​தப்​படு​வ​தாக புகார் தெரி​வித்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்​கக்​கோரி பீட்டா அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் 2014-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்​தது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக​வும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்​தக்​கோரி​யும் தமிழகம் முழு​வதும் பொது​மக்​கள், இளைஞர்​கள் போராட்​டம் நடத்​தினர். உலகப்​பு​கழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடை​பெறும் அலங்​காநல்​லூரில் ஆயிரக்​கணக்​கானோர் பகல், இரவு பாராமல் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இதை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதையடுத்து மாநிலம் முழு​வதும் போராட்​டம் தீவிரமடைந்​தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்​தும் முடிவை மாநில அரசே எடுக்​கலாம் என மத்​திய அரசு அறி​வித்​தது. தொடர்ந்து தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2017-ல் ஜல்லிக்கட்டு சிறப்​புச் சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இருப்​பினும் நிரந்தர சட்​டம் நிறை வேற்​றக்​கோரி போராட்​டங்​கள் தொடர்ந்து நடை​பெற்​றன.

அலங்​காநல்​லூரில் நடை​பெற்ற போராட்​டம் தொடர்​பாக சையத் உமர் முக்​தர், சகாய ஆன்றோ கிளைட்​டன், கம்​பூர் செல்​வ​ராஜ், யுக, கீதா, ரெங்​க​ராஜன், தமிழரசன், வினோத்​ராஜ், முகிலன் உள்பட 64 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். பின்​னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்​றப்​பட்​டது.

ஜல்​லிக்​கட்டு போராட்​டம் தொடர்​பாக மாநிலம் முழு​வதும் பல்​வேறு வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக்​கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இந்த கோரிக்​கையை ஏற்று ஜல்​லிக்​கட்டு போராட்ட வழக்​கு​களை தமிழக அரசு திரும்ப பெற்​றது. இருப்​பினும் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு திரும்​பப் பெறப்​பட​வில்​லை.

இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்​ட மற்றும் அமர்வு நீதி​மன்​றத்​தில் 2018 முதல் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. விசா​ரணை நிலு​வை​யில் இருந்​த​போது 3 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய 5 பேர் மீதான வழக்கு தனியே பிரிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் எஞ்​சிய 56 பேரை​யும் விடு​தலை செய்து நீதிபதி ஆர்​.ஜோசப்​ஜாய் தீர்ப்​பளித்​தார்.

<div class="paragraphs"><p>அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞர்களுடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர். | <em>படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</em> |</p></div>
2016-2022 ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பிப்.13-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in