

திருநெல்வேலி மாவட்டத்தில் 82 ஊராட்சிகள் 11 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், 1 மாநகராட்சி பகுதிகளில் சுகாதராத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அலுவலர்கள் மூலம் 2-ம் கட்டமாக வெளியூரிலிருந்து வந்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பூலம் கிராமத்தில் சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 82 ஊராட்சிகள் 11 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், 1 மாநகராட்சி பகுதிகளில் சுகாதராத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அலுவலர்கள் மூலம் 2-ம் கட்டமாக வெளியூரிலிருந்து வந்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து வந்தவர்களுக்கு மாவட்ட எல்லையில் முதல் முறையாக அனைவரையும் தீவரமாக சோதனை செய்து, பின்னர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் 2-வது முறையாக சோதனை மேறக்கொள்ளும் பணி மாவட்ட முழுவதும் தீவரமாக நடைபெற்று வருகிறது.
வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு இந்த 2-ம் கட்ட சோதனையில் காய்ச்சல், போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் அவர்கள் இதயதுடிப்பு சீராக இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள்,செவிலியர்கள் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், பெரியவர்கள், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாரம் இறுதிக்குள் வெளியூரிலிருந்து மாவட்டத்திற்குள் வந்த அனைவருக்கும் பரிசோதனைகள் நிறைவுபெறும் என்று தெரிவித்தார்.