

முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூன் 30 வரை கீழமை நீதிபதிகள் வீடுகளில் இருந்து பணியாற்ற உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள் ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா முழு ஊரடங்கு காரண மாக சென்னை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வரும் ஜூன் 30 வரை வீடுகளில் இருந்தே பணி யாற்ற உயர் நீதிமன்ற நிர்வாகக்குழு அனுமதியளித்துள்ளது.
நீதிமன்றங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக 4 மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் தருமபுரி, நீலகிரி, கிருஷ் ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாத புரம், நாகப்பட்டினம், கரூர், சிவ கங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருது நகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களிலும் தற்போதுள்ள நடைமுறையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படும் என அவர் தெரி வித்துள்ளார்.