விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
Updated on
1 min read

விதிமுறைகளை மீறி சென்னையின் முக்கிய சாலைகளில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்து களால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரம் ஆம்னி பேருந்துகள் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, நாகர் கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்து களை இயக்க வேண்டும். ஆனால் பிராட்வே, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், கிண்டி, வடபழனி, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து இரவு 7 மணி முதல் ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இவர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அண்ணா சாலையில் உள்ள முக்கியமான பேருந்து நிலையங்களிலும், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

அரசிடம் அறிக்கை அளிக்க திட்டம்

இது தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயனார் ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘மாநகரில் பல்வேறு இடங் களில் இருந்து ஆம்னி பேருந்து கள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம் உட்பட பல்வேறு போக்குவரத்து கழகங் களுக்கு வருவாய் இழப்பு ஏற் படுகிறது. இதுதவிர, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எந்த நேரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது?, எங்தெந்த பகுதிகளுக்கு இயக் கப்படுகிறது? பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக் கிறார்கள் என்ற எந்த விதிமுறை களையும் அவர்கள் பின்பற்றுவ தில்லை. இதை போக்குவரத்து ஆணையரகமும், போக்கு வரத்து போலீஸாரும் கண்டுகொள்வ தில்லை. இதுபோன்ற பிரச்சினை களுக்கு தீர்வு கண்டால்தான் அரசுக்கு போக்குவரத்து துறை மூலம் வருவாய் கிடைக்கும். எனவே, ஆம்னி பேருந்துகள் தொடர்பான அறிக்கையை தயா ரித்து வருகிறோம். இந்த அறிக் கையை நிர்வாகத்திடமும், தமிழக அரசிடம் அளிக்கவுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in