

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள தாளையூத்து கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசிப்பவர் முருகசாமி (60). இவருடன் மனைவி சின்னத்தாய், இரண்டு மகள், ஒரு மகன், முருகசாமியின் சகோதரி ஆகி யோர் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்டோர் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்து தப்பினர்.
இது குறித்து வீட்டில் இருந் தோர் கூறுகையில், நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் எழுந்தபோது கத வைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. கதவை உடைக்க முயன்றனர்.
வேறு வழியின்றி கதவைத் திறந்தபோது 10-க்கும் மேற் பட்டோர் பெண்களைத் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பினர். வெளியில் வந்து பார்த்தபோது காவலுக்கு இருந்த நாயை அரிவாளால் வெட்டியது தெரிந்தது, என்றனர்.
திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல், பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசா ரிக்கின்றனர்.