

மதுரை தனக்கன்குளம் அருகே உள்ள பர்மா காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து ‘‘கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை’’ நடத்தி வந்தவர் விஜயன் (எ) சாமுவேல். இவர் சில நாட்களுக்கு முன்பு, மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் மூலம் மோட்டார் சைக்கிள் ஒன்றை விற்க முயன்றார். ஆனால், மோட்டார் சைக்கிள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியா மல் திணறினார். சந்தேகமடைந்த மெக்கானிக் சுப்பிரமணியபுரம் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சாமுவேலைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இது குறித்து சுப்பிரமணியபுரம் காவல் ஆய் வாளர் பிரியா கூறியதாவது:
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் விஜயன் (எ) சாமுவேல். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தனக்கன்குளத்துக்கு வந் துள்ளார். ரூ.10 ஆயிரத்துக்கு வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து, மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அங்கீகரிக்கப்பட்ட திருச் சபையை சேர்ந்தவர் அல்ல எனக் கூறப்படுகிறது. கரோனா தடுப்பு ஊரடங்கால் போதிய வருமானம் இன்றி, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் தவித்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் களை திருடி விற்கத் திட்டமிட்டார்.
கரோனா ஊரடங்கையொட்டி திருமங்கலம், எஸ்.எஸ்.காலனி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதி களில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராள மான மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்துள்ளது. சில வாகனங்களை அடகு வைத்து பணம் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விஜயன், அவருக்கு உதவிய திருநகரைச் சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன என்றார்.