

திருச்செந்தூர் முருகன் கோயில் கிரி பிரகாரத்தில் ரூ.98 லட்சம் மதிப்பில் கூரை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கிரிப்பிரகார மண்டபக் கூரையின் ஒரு பகுதி கடந்த 2017-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. அதன்பின், மண்டபம் மற்றும் கடைகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.
கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கிரிப் பிரகாரத்தில் தற்காலிகப் பந்தல் அமைக்கப்பட்டது.
தற்போது, உபயதாரர் சார்பில் ரூ.98.5 லட்சம் மதிப்பில், தலா 20 அடி உயரம் மற்றும் அகலத் தில், 650 மீட்டர் சுற்றளவில் இரு புறமும் அலுமினியத்தாலான கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித் கூறுகையில், இம் மாதம் இறுதிக்குள் இப்பணி நிறை வடையும். விரைவில் கல் மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்படும், என்றார்.
இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து வரும் 2021-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.