

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் மாத்திரை வழங்கப்படுகிறது. அறிகுறி உள்ளவர்களுக்குமாத்திரை வழங்கப்படவில்லை.
இதேபோல், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட ஜிங்க், வைட்டமின் சி, கபசுர குடிநீர் பொடி,முகக் கவசம், சானிடைசர், சோப்புஅடங்கிய கரோனா வைரஸ் தடுப்பு பெட்டகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாத்திரைகளை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.