கோயம்பேடு போல் மதுரை காய்கனி மார்க்கெட்டும் மூடல்: கரோனா தொற்றால் மாவட்ட நிர்வாகம் திடீர் முடிவு

கோயம்பேடு போல் மதுரை காய்கனி மார்க்கெட்டும் மூடல்: கரோனா தொற்றால் மாவட்ட நிர்வாகம் திடீர் முடிவு
Updated on
1 min read

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களின் பெரிய காய்கனி மார்க்கெட்டுகள் மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் பிரித்து நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மார்க்கெட்டிலும் அப்படித்தான் நடக்கிறது. மதுரையின் மற்றொரு மிகப்பெரிய காய்கனி மார்க்கெட்டான பரவை மொத்த மார்க்கெட்டில், சில்லறை விற்பனைக்குத் தடை விதித்த மாவட்ட நிர்வாகம் அந்தக் கடைகளை அருகில் உள்ள கல்லூரி மைதானங்களுக்கு மாற்றியது.

இந்த நிலையில், பரவை மார்க்கெட்டில் பணிபுரியும் சிலருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னை கோயம்பேடு போல, பரவை மார்க்கெட்டும் மாறிவிடக்கூடாது என்று மொத்த மார்க்கெட்டையும் கால வரையறையின்றி மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பரவை மொத்தக் காய்கனி மார்க்கெட் சங்கத் தலைவர் ஜெ.மனுவேல் ஜெபராஜ் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், “அரசின் மறு உத்தரவு வரும் வரையில் பரவை காய்கனி மார்க்கெட் செயல்படாது. அதேநேரத்தில், அருகிலுள்ள திறந்த வெளி மைதானங்களில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் காய்கனி வியாபாரம் நடைபெறும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in