

‘சார்க்’ நாடுகளுக்கான பிரத் யேக செயற்கைக்கோள் வரும் 2016-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படும்’ என ‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் கூறினார்.
இதுகுறித்து, கிரண்குமார் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய விண்வெளி வரலாற்றில் இன்று சிறப்பான நாள். ‘ஆஸ்ட்ரோசாட்’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம், வானியல் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்க முடியும்.
பிரதமர் மோடி அறிவித்த ‘சார்க்’ நாடுகளுக்கான பிரத்யேக செயற்கைக்கோள் வரும் 2016-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படும். 2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக் கோளில் 12 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். இவை ‘சார்க்’ அமைப்பில் உள்ள ஒவ்வாரு நாட்டுக்கும் ஒரு டிரான்ஸ் பாண்டர்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றார்.