

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. ஆசாரிபளளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 61 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, மும்பை உட்பட வெளியிடங்களில் இருந்து வருவோரால் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்ட இவர்கள் தங்கும் விடுதிகள், மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரை ஒரே நாளில் வந்த 670 பேர் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை விடுதிகளில் தங்க வைக்க சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனால் ஏற்கெனவே விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.