

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா பாதிப்பு. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 500-ஐ நெருங்குவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று வரையில் மொத்தம் 443 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஊழியருக்கு பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதேமருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது இன்று தெரியவந்தது.
இதுபோல் மாநகரில் மேலும் 2 பேர், புறநகர் பகுதிகளில் 21 பேர் என்று மொத்தம் 24 பேருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தலைநகரில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதுவும் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுர்ம்,செங்கல்பட்டு என தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இபாஸ் பெற்றும் பெறாமலும் வருவதால் தொற்று அதிகரித்துள்ளது.