

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்கு சித்த மருந்தைப் பயன்படுத்த வலியுறுத்தி காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்பானிஸ் ஃப்ளு போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்டபோது, தமிழகத்தில் சித்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது கரோனாவிற்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவம் நல்ல பலனளித்து வருகிறது.
மேலும்சென்னை சாலிகிராமத்தில் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன், சித்த மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும், என்று கூறினர்.