களத்தில் பணிபுரிவோரை ஊக்குவிக்க எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்- அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவரிடம் காணொலிக்காட்சி மூலம் உரையாடுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவரிடம் காணொலிக்காட்சி மூலம் உரையாடுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை நேற்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பின்னர், செய்தி யாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனா பரவ லைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப் படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், எத்தகைய சூழலையும் எதிர் கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நோயை வைத்து யாரும் அரசியல் செய்யாமல், களத்தில் நின்று பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க் கட்சியினர் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படைத் தன்மையோடுதான் அரசு செயல் பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ நலமுடன் உள்ளார். அவரிடம் தமிழக முதல்வர் 2 முறை செல்போன் மூலம் பேசியுள்ளார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in