Published : 15 Jun 2020 06:35 AM
Last Updated : 15 Jun 2020 06:35 AM

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு- ‘முக்கொம்பில் தேக்கி வைக்காமல் முழுமையாக திறக்கப்படும்’

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நாளை(ஜூன் 16) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று (ஜூன் 15) இரவு கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் குறுவை சாகு படிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந் தராவ் கல்லணையில் நேற்று ஆய்வு செய்தார்.

காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் தலைப்பு பகுதி களையும், தண்ணீர் திறக்கப்பட உள்ள ஷட்டர்களையும் பார்வை யிட்டு ஆய்வு செய்த அவர், அவற்றின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், கல்லணைக்கு தண்ணீர் திறப்பையொட்டி வரும் அனைத்து வாகனங்களையும் முகப்பிலேயே நிறுத்தவும், அங்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கீழ்க் காவிரி வடிகால் வட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் எஸ்.அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

காவிரியில் தூய்மைப் பணி

கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்க உள்ள நிலையில், திருவையாறில் காவிரி ஆற்றைத் தூய்மை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. திருவையாறு பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இப் பணியில் ஈடுபட்டனர்.

திருவையாறு ஓடத்துறை படித்துறை, புஷ்ப மண்டப படித்துறை, கல்யாண மகால் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை பகுதிகளில் டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. காவிரி ஆற்றின் தூய்மையை காப்பதன் அவசியம் குறித்து அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

முக்கொம்பில் தேக்காமல்...

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், மாயனூர் தடுப்பணைக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதமே தண்ணீர் வந்து சேருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் லாலாபேட்டை அருகேயுள்ள சிந்தலவாடியைக் கடந்து வந்துகொண்டிருந்த தண்ணீர், இன்று காலை 9 மணியளவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை வட்டாரத்தினர் கூறியபோது, “மாயனூர் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் முக்கொம்பில் தேக்கி வைக்கப்படாமல், கல்லணைக்கு அப்படியே திறக்கப்படும்” என் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x