

வெளியூர்களில் இருந்து கோவை வந்த 15 பேருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட்டிலிருந்து விமானம் மூலம் வந்த கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 28 வயது பெண், திருச்சியைச் சேர்ந்த 35 வயது ஆண், மருதமலையைச் சேர்ந்த 60 வயது ஆண், கன்னியாகுமரியைச் சேர்ந்த 23 வயது ஆண் ஆகியோருக்கு விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது இன்று (ஜூன் 14) உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, சென்னையில் இருந்து சொந்த காரில் கோவை வந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 64 வயது ஆண், சித்தாபுதூரைச் சேர்ந்த 72 வயது பெண், சரவணம்பட்டியைச் சேர்ந்த 30 வயது ஆண், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 29 வயது பெண், காளப்பட்டியைச் சேர்ந்த 38 வயது ஆண் ஆகியோருக்கு கருமத்தம்பட்டி சோதனைச் சாவடியில் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதவிர, அரக்கோணத்திலிருந்து ரயில் மூலம் வந்த ஒண்டிபுதூரைச் சேர்ந்த 56 வயது பெண், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 24 வயது ஆண், 46 வயது ஆண், சரவணம்பட்டியைச் சேர்ந்த 24 வயது ஆண், பாம்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த 52 வயது பெண், சிறுமுகையைச் சேர்ந்த 31 வயது ஆண் ஆகியோருக்கு கோவை ரயில் நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.