

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்கள் முன்பாக கோஷங்களை எழுப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப் பின் தலைவர் ஈஸ்வரன் கூறிய தாவது:
தமிழ்நாடு திருக்கோயில் பணி யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப் புக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடத்தப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் பணிபுரியும் 8 ஆயிரத்து 184 பேர் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்று முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
ஆனால், அது இன்னமும் செயல்படுத்தப் படாமல் உள்ளது. மேலும், 5 ஆண்டு களாக பதவி உயர்வும் வழங்கப் படவில்லை, தர ஊதியமும் தரப்பட வில்லை. இதனைக் கண்டித்து கடந்த 9-ம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல் கிறோம்.
இதையடுத்து கோயில் வாசல் களில் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தினமும் கோஷம் போடு கிற போராட்டத்தை நடத்தவுள் ளோம். பின்னர் அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து வரும் 23-ம் தேதி மனு கொடுக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.