

இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் அமெரிக் காவைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இலங்கை இறுதிப் போரின் போது நடந்த போர்க் குற்றங்க ளுக்கு உள்நாட்டு அளவிலான விசாரணை போதும் என்று அமெ ரிக்கா கூறியுள்ளது. இதை கண் டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ராஜரத் தினம் விளையாட்டு அரங்கம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது. இதில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் 100-க்கும் அதிகமான தொண்டர் கள் பங்கேற்று அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி யாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஐ.நா. மன்றத்தில் கூறிய அமெரிக்கா, தனது நிலைப் பாட்டை தற்போது மாற்றிக் கொண்டு, உள்நாட்டு விசார ணையே போதும் என்று கூறியுள் ளது. இதுதொடர்பான தீர் மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் அமெரிக் காவைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
இலங்கை எதிர்க்கட்சி தலைவ ராக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வர வேற்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை சம்பந்தன் வெளிப் படுத்த வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் சிங்க ளர்களை வெளியேற்ற சம்பந்தன் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தூதரக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.