விவசாயியின் 101-வது பிறந்தநாளை விழாவாக கொண்டாடிய உறவினர்கள்

101-வது பிறந்தநாள் விழாவில் தனது மனைவியோடு விவசாயி வீரப்பன்.
101-வது பிறந்தநாள் விழாவில் தனது மனைவியோடு விவசாயி வீரப்பன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இடையப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வீரப்பன் (101). அவரது மனைவி அங்கம்மாள் (96). சிறுவயதிலேயே பர்மா சென்ற வீரப்பன், இரண்டாம் உலகப் போரின்போது சிதம்பரம் வந்தார். அங்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் காவலாளியாகப் பணிபுரிந்தார்.

ஓய்வுபெற்ற பின் சொந்த ஊரான இடையப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். சத்தான உணவு, கடின உழைப்பு போன்றவற்றால் வீரப்பன்-அங்கம்மாள் தம்பதி உடல் நலத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வீரப்பனின் 101-வது பிறந்தநாளை அவரது பிள்ளைகள், உறவினர்கள் சேர்ந்து விழாவாகக் கொண்டாடினர். பேரன், பேத்திகள் சேர்ந்து வாங்கிய 10 கிலோ கேக்கை வீரப்பன் வெட்டி, மகிழ்ச்சியுடன் பிறந்தநாளைக் கொண்டாடினார். கரோனா ஊரடங்கால் 20 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in