மதுரையில் யாசகரின் மனிதநேயம் 3-வது முறையாக ரூ.10,000 நிவாரண நிதி

பூல்பாண்டியன்
பூல்பாண்டியன்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்குச் சென்று யாசகம் பெறுகிறார். அதில் கிடைக்கும் பணத்தில் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கிராமங்கள் முன் னேற்றத்துக்கும் வழங்குகிறார்.

கரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் மதுரையில் முகாமிட்டுள்ள இவர், தான் யாசகம் பெற்ற பணத்திலிருந்து ரூ.10,000-ஐ கடந்த மே மாதம் ஆட்சியரை சந்தித்து கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். அதன்பிறகு 2 வாரங்களுக்குப் பின் மீண்டும் இரண்டாவது முறையாக ரூ.10,000 வழங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்த யாசகர் பூல்பாண்டியன், மூன்றாவது முறையாக ஆட்சியரிடம் நிவாரணப் பணிக்காக ரூ.10,000 நிதி வழங்கினார். ஆட்சியர், அவரிடம் நிதி பெற்றதற்கான ஒப்புகைச் சான்றை அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in