புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பேயாடிக்கோட்டை கண்மாயில் நேற்று எரிந்த கருவேலங்காடு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பேயாடிக்கோட்டை கண்மாயில் நேற்று எரிந்த கருவேலங்காடு.

கருவேலங்காடு தீப்பற்றி எரிந்தது சமூக வலைதளங்களில் விமான விபத்தானது: தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் பேயாடிக்கோட்டை அருகே மேல வசந்தனூரில் உள்ள மேலக் கண்மாயில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து, எரிந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமா னோர் கண்மாய் பகுதியில் குவிந் தனர். அரசு அலுவலர்களும் அங்கு வந்தனர். பின்னர், விமான விபத்து என்பது வதந்தி என உறுதியானது.

இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறியது:

பேயாடிக்கோட்டை பகுதியில் வானில் தாழ்வாக விமானம் ஒன்று பறந்தது. அப்போது, மேலக் கண்மாயில் கருவேலங்காடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

இதனால், விமானம் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து இருக்கலாம் என தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அரசு அலுவலர்கள் கண்மாய்க்கு வந்து விசாரித்ததில், விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட விமான பாகங்கள், அமெரிக் காவின் கலிபோர்னியாவில் ஏற் கெனவே நடந்த விமான விபத்து படங்கள் எனத் தெரியவந்தது என்றனர்.

இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியபோது, “சம்பந்தப்பட்ட பகுதியில் அதி காரிகள் ஆய்வு செய்து, அந்த இடத்தில் விமான விபத்து எதுவும் நடைபெறவில்லை என உறுதிசெய்துள்ளனர்.

இது போன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in