தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா
Updated on
1 min read

தென்காசியைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 115 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஒருவர், ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த ஒருவர், அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களையும் சேர்த்து தற்போது 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் 9 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்த 5537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 283 பேர் அரசு முகாம்களிலும், மற்ற 5254 பேரும் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்காசியில் நேற்று 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது இன்று 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

பெண் மருத்துவருக்கு கரோனா:

தென்காசியைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணியாற்றிய நகர்ப்புற சுகாதார நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி மூலம் மருத்துவருக்கு கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்பதால், சிகிச்சைக்கு வந்தவர்களை கண்டறியும் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in