ராணிப்பேட்டையில் 10 பேரை பலிகொண்ட விபத்தால் மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் தகவல்

ராணிப்பேட்டையில் 10 பேரை பலிகொண்ட விபத்தால் மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் தகவல்
Updated on
1 min read

ராணிப்பேட்டையில் 10 தொழி லாளர்கள் பலியான விபத்து காரண மாக மூடப்பட்ட தோல் தொழிற் சாலைகளை இயக்க மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள் ளது. தோல் தொழிற்சாலைகள் தரப்பு வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் நேற்று இதனை தெரிவித்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய (சிஇடிபி) தொட்டி இடிந்து விழுந் ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந் தனர். அதனைத் தொடர்ந்து, சிஇடிபி-ல் உறுப்பினர்களாக இருந்த 72 தோல் தொழிற்சாலை களை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மின் இணைப்பையும் துண்டித்தது.

ராணிப்பேட்டை விபத்து தொடர் பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் நடைபெற்று வரு கிறது. இதற்கிடையில் மின் இணைப்பு வழங்கக் கோரி 4 தோல் தொழிற்சாலைகள் 1-ம் அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தோல் தொழிற் சாலைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிற்சாலைகளை இயக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாத காலத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் உள்ளதால், அதன் தீர்ப்பை பொருத்து, அனுமதியை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அந்த அனுமதியில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிஇடிபி விபத்து தொடர்பான வழக்கு செப்டம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வருவதையொட்டி, இந்த வழக்கு விசாரணையும் செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தர விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in