

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டிப் பகுதியில் பெரும்பாலான மக்கள் நெசவுத்தொழிலையே நம்பியுள்ளனர். ஊரடங்கால் வேலையிழந்த இவர்களுக்கு மீண்டும் பணி வழங்காமலும், குறைந்த கூலியே நிர்ணயம் செய்வதாகவும் கூறி முதன் முதலாக ஜெ.புதுக் கோட்டையைச் சேர்ந்த நெசவாளர் காலனி மக்கள் கஞ்சித்தொட்டி திறந்தனர்.
இதையடுத்து நேற்று சின்னாளபட்டி அண்ணாநகர், மேட்டுப்பட்டியை சேர்ந்த நெச வாளர்கள் வீடு வீடாக வசூல் செய்து கஞ்சித்தொட்டி திறக்க முடிவு செய்து அடுப்பைப் பற்ற வைத்தனர். இதையறிந்த ஆத்தூர் வட்டாட்சியர் பவித்ரா மற்றும் போலீஸார் கஞ்சித்தொட்டி திறப் பதைத் தடுத்து நெசவாளர் காலனி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். தீர்வு எட்டப்பட்டவில்லை. இருப்பினும் கஞ்சித்தொட்டி திறப்பை நெசவாளர்கள் கைவிட் டனர்.