Published : 12 Jun 2020 07:16 AM
Last Updated : 12 Jun 2020 07:16 AM

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் குறைவு: அமைச்சர் நிலோபர் கபீல் பெருமிதம்

வாணியம்பாடியில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபீல் கலந்துகொண்டு, விழிப்புணர்வு நோட்டீஸ், விளம்பர பதாகைகளை அறிமுகப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திட்டங்களால் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள்குறைந்துள்ளனர் என அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நோட்டீஸ், விளம்பர பதாகைகளை வெளியிட்டு பேசும்போது, "தமிழக முதல்வராக இருந்தஎம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்தினார். ஜெயலலிதா கடந்த 1994-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் எழுந்தது. குழந்தைதொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

குழந்தை தொழிலாளர்களைமீட்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரஉதவி எண் 1098 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x