

உலக வானிலை அமைப்பின் கடல்சார் கண்காணிப்பு பிரிவுதுணைத் தலைவராக மதுரையைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக வானிலைத் தரவுகளை ஒருங்கிணைத்து தரும் அமைப்பான உலக வானிலை அமைப்பில் தற்போது கடல்சார் கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில், மதுரையைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்.வெங்கடேசனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில், கடல்சார்கண்காணிப்பு திட்ட இயக்குநராகஉள்ளார். உலக வானிலை அமைப்பில் முக்கிய பதவியில்தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.