

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத துவக்கத்தில் நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி வரும் 14-ம் தேதி மிதுன மாதத்திற்காக மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட உள்ளது.
தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி சுதிர்நம்பூதரி நடைதிறக்க உள்ளார்.
வரும் 19-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைசாத்தப்படும்.
ஊரடங்கினால் கடந்த 2 மாதமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இம்மாதம் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் சன்னிதானத்தில் ஒரே நேரத்தில் 50பேர் வீதம் ஒரு மணி நேரத்தில் 200 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளும், வயதானவர்களும் வர வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பக்தர்கள் வருகைக்கு தேவசம் போர்டு மீண்டும் தடைவிதித்துள்ளது.
இம்மாத வழிபாட்டில் பங்கேற்கலாம் என்று பக்தர்கள் பலரும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் தடை விதிக்கப்பட்டிருப்பது பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.