

விருதுநகர் மாவட்டம், மல்லா ங்கிணர் அருகே உள்ள மேலத்துலுக்கன்குளத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கிருஷ்ணகுமார் (36). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவர், தற்போது வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை செய்து வருகிறார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆயிரம் விவசாயிகளின் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலவசமாக உழவு செய்துள்ளார். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நவீன டிராக்டர் மூலம் ஊராட்சிகளில் அரசு கொடுக்கும் மருந்தை பயன்படுத்தி இலவசமாக கிருமி நாசினி தெளித்து வ௫கிறார். பேராலி, மல்லாங்கிணர், மேலத்துலுக்கன் குளம், கல்குறிச்சி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளித்து வ௫கிறார்.
கிருஷ்ணகுமார் கூறுகையில், வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கிருமி நாசினி தெளிக்கிறேன் என்றார்.