ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ஜி.காளன் காலமானார்

ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ஜி.காளன் காலமானார்
Updated on
1 min read

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (ஐஎன்டியுசி) மாநி லத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.காளன் (82) சென்னை அம்பத்தூரில் நேற்று மாலை காலமானார்.

16 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஎன்டியுசி மாநிலத் தலைவராக இருந்த அவர், 1991 முதல் 1996 வரை வில்லிவாக்கம் எம்எல்ஏவாக இருந்தார். நாட்டின் அனைத்து துறை முகங்களிலும் உள்ள ஐஎன்டியுசி சம்மேளனத்தின் தலை வராகவும் இருந்தார்.

உடல் நலக் குறைவால் அவர் நேற்று காலமானார். ஜி.காளனின் உடல் இன்று (ஜூன் 11) மாலை அம்பத் தூரில் தகனம் செய்யப்படுகிறது. ஜி.காளனின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in