ரூ.7.84 கோடியில் 56 புதிய ஆம்புலன்ஸ்கள்: பேரவையில் அமைச்சர் தகவல்

ரூ.7.84 கோடியில் 56 புதிய ஆம்புலன்ஸ்கள்: பேரவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தும் வகை யில் ரூ.7.84 கோடியில் 56 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங் கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகா தாரத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத் துக்கு பதிலளித்து அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு ரூ.8,245.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 696 பேரின் உறுப்பு கள் தானத்தால் 3,840 பேர் பயன டைந்துள்ளனர். மருத்துவ பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் 5,578 மருத்துவர்கள், 7,243 செவிலியர்கள் உட்பட 14,195 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தாண்டில், பச்சிளம் குழந்தை கள் பராமரிப்புக்கு சிறப்பு மையங் கள், சென்னை ஸ்டான்லி மருத்து வக் கல்லூரி மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவ மனை, 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகிய வற்றுக்கு பல்வேறு கருவிகள் ரூ.11.14 கோடி செலவில் வாங்கி வழங்கப்படும். அரசு மருத்துவ மனைகளில் உள்ள உபகரணங் களை பராமரிக்க ஆண்டு பரா மரிப்பு செலவுக்காக ரூ.3.14 கோடி வழங்கப்படும். தூய்மையாக உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ‘காயகல்ப்’ விருது வழங்கப்படும். 19 மாவட் டங்களில் செயல்படுத்தப் பட்டு வரும் தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டம், மீதமுள்ள 12 மாவட் டங்களுக்கும் ரூ.1.40 கோடியில் விரிவுபடுத்தப்படும்.

மாநிலத்தில் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை வலுப் படுத்தும் வகையில், பழைய ஆம்பு லன்ஸ்களுக்கு பதில் ரூ.7.84 கோடியில் 56 புதிய ஆம்புலன்ஸ் கள் வழங்கப்படும். முக்கிய பிரமுகர் களின் சாலை வழி பயணத் தின்போது உடன் செல்வதற்காக அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 4 ஆம்புலன்ஸ்கள் ரூ.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் மாநில அளவிலான ஆராய்ச்சிக் கூடம் நிறுவப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in