ஏரி பகுதியில் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயி போராட்டம்

தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்ட சின்னதுரை.
தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்ட சின்னதுரை.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் கரூர் புறவழிச் சாலையில் திண்டுக் கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக் குடி வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏரிக்குள் கொட்டிய மண்ணை அள்ளாமல் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் காரைக்குடி அலகின் இயக்குநர் செயல்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும், சாலையை ஏரி வழியாக அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை பொதுப்பணித் துறை திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் தனியொருவராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டச் செயற்பொறியாளர் ரா.பாஸ்கர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுப்பணித் துறை சார்ந்த ஏரிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப் படும் எனத் தெரிவித் ததால், சின்னதுரை போராட்டத்தை விலக்கிக் கொண் டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in