தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் தனியார் பேருந்து சேவை தொடக்கம்- குறைவான பயணிகளே பயணித்தனர்

தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் தனியார் பேருந்து சேவை தொடக்கம்- குறைவான பயணிகளே பயணித்தனர்
Updated on
1 min read

தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தவிரஇதர மாவட்டங்களில் தனியார் பேருந்துகளின் சேவை நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன்30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வு அளிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையே, தனியார் பேருந்து சேவை 78 நாட்களுக்கு பிறகு நேற்று தொடங்கியது.

பணிக்கு வந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும் பேருந்தில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறை குறித்தும்அறிவுறுத்தப்பட்டது. பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 3 இருக்கைகள் இடத்தில் 2 பேரும்,2 இருக்கை உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும்படி குறியீடு அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறும்போது, ‘‘அரசின் வழிமுறைகளை பின்பற்றி தனியார் பேருந்துகளைஇயக்குகிறோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 4,600 பேருந்துகளில் 4,400 பேருந்துகள் இயங்கதொடங்கியுள்ளன. முதல்நாளில், பயணிகள் கூட்டம் இல்லை. வரும்நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in