

சென்னையில் கரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துவிதமான உதவிகளுக்கும் பொதுமக்கள் அழைக்க மண்டல ரீதியாக உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை (ஜூன் 9) 34 ஆயிரத்து 914 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 9) மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 1,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் அதுசார்ந்த உதவிகளுக்கு பொதுமக்கள் அழைக்க மண்டல ரீதியாக உதவி எண்களை சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 10) அறிவித்துள்ளது.
கரோனா தொற்று தொடர்பான தனிமைப்படுத்துதல், பரிசோதனைகள், காய்ச்சல் மையங்கள், நோய்த்தடுப்புப் பகுதிகள், நோய்த்தடுப்பு சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி எண்கள் 24 மணிநேரமும் இயங்கும்.
மண்டல ரீதியான உதவி எண்கள்: