மதுரையில் காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலை

மதுரையில் காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலை
Updated on
1 min read

மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரது உறவினரான சரத்குமார், திருமங்கலத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகளை சமீபத்தில் காதல் திருமணம் செய்தார். இதற்கு மணிகண்டன் உதவியதால் மணிகண்டனுக்கும், விஜயனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூன் 7-ல் திருமங்கலத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு மணிகண்டன் சென்றார். அப்போது, நண்பர்களான சபரிநாதன், விக்னேசுவரன், மனோ பாலச்சந்தருடன் சேர்ந்து புளியங்குளத்திலுள்ள தோட்டத்தில் மது அருந்தினர். போதையில் மணிகண்டன் மட்டும் தூங்கி விட்டார். இதையறிந்த திருமங்கலம் சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். செக்கானூரணி போலீஸார் விசாரணையில் காதல் திருமணத்துக்கு உதவியதால் விஜயனின் தூண்டுதலில் இக்கொலை நடந்திருப்பது தெரிந்தது. இது தொடர்பாக சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in