Published : 10 Jun 2020 06:48 AM
Last Updated : 10 Jun 2020 06:48 AM

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நில வகைப்பாடு; வேடந்தாங்கல் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்படாது- முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தகவல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மத்திய அரசு அறி வுறுத்தலின்படி நில வகைப்பாடு பணிகள் நடப்பதாகவும், 5 கி.மீ. சுற்றளவு குறைக்கப்படாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேடந்தாங்கல் ஏரியின் மொத்த பரப்பு 73.06 ஏக்கராகும். கடந்த 1988-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி இந்த ஏரி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிக்கையில் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலம் வருவாய் நிலங்களும் சர ணாலயமாக அறிவிக்கை செய் யப்பட்டது. இதில், வன நிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு அனைத்து சரணாலயங்களையும், மையப்பகுதி, இடைநிலப்பகுதி, சுற்றுச்சூழல் பகுதி என நில வகைப் பாடு செய்ய அறிவுறுத்தியது. அதன்படி அனைத்து சரணாலயங் களிலும் நில வகைப்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வேடந்தாங்கல் சரணாலய ஏரியை சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப் பரப்பில், முதல் 1 கிமீ தூரம் மையப் பகுதி எனவும், 1 முதல் 3 கி.மீ. வரையுள்ள பகுதி இடைநிலப் பகுதியாகவும், 3-லிருந்து 5 கி.மீ. பகுதி சுற்றுச் சூழல் பகுதியாகவும் வகைப் படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகிறது என்பது மிகவும் தவறான கருத்தாகும். எனவே, முன்பு உள்ளது போன்றே 5 கி.மீ. சுற்றளவு எந்த குறைபாடும் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே திகழும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், தனி யார் மருந்து ஆலைக்காக வேடந் தாங்கல் பறவைகள் சரணா லயத்தின் சுற்றளவை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x