Published : 10 Jun 2020 06:38 AM
Last Updated : 10 Jun 2020 06:38 AM

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஆகஸ்ட் வரை வீட்டுக்கே சென்று ஊதியம் வழங்க நடவடிக்கை

சென்னை

தமிழகத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் வரை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, வங்கி முகவர்கள் மூலம் வீ்ட்டுக்கே சென்று சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், நோய் தொற்று அதிகம் இல்லாத 25 மாவட்டங்களில் 100 சதவீதம், நோய் தொற்று அதிகமுள்ள 11மாவட்டங்களில் 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து சிரமம்

இந்நிலையில், தற்போது கரோனா ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாத நிலை, பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம் ஆகியவற்றால் வங்கிகளுக்குச் சென்று பணம் எடுக்க முடியாததாலும், நோய்த் தொற்று குறையும் வரை அடுத்த 3 மாதங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்குச் சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கான ஊதியம்

தமிழகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் பிற வங்கிகளைச் சேர்ந்த 8,800 வங்கி முகவர்கள் மூலம் 100 நாள் திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என 3 மாதங்களுக்கு வீடுகளுக்குச் சென்று ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப வங்கி முகவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x