

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில் ஐஐடி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கேசபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் நாகேந்திரகுமார் (23). இவர் சென்னை ஐஐடி-யில் எம்.டெக். 2 ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி யில் உள்ள தாமிரபரணி விடுதியில் 5 வது மாடியில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்று திரும்பிய அவர் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை யில் விடுதி அறையில் நாகேந்திரகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நாகேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பரிசோத னைக்காக ராயப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்துள்ளது. இதில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாகேந்திரகுமார் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சில நாட்களாக அதிக மன அழுத் தத்தில் இருந்துள்ளார். இந்நிலை யில்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்’’ என்றனர்.
‘சிநேகா’வுக்கு போன் பண்ணுங்க ப்ளீஸ்
உணர்ச்சிபூர்வமான பிரச்சி னைகள் மட்டுமே தற்கொலைக்கு முதல் காரணம். படிப்புடன் கூடிய வாழ்க்கை கல்வியையும், சின்ன சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். போராடும் குண மும், தன்னம்பிக்கையும் இன்றைய இளைஞர்களில் பலரிடம் இருப் பதில்லை. தோல்வியை சகித்துக் கொள்ளும் தன்மையை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பை தாண்டி மனம்விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற சிநேகா தொண்டு நிறுவனத்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம்.
இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவர்கள் தங்களின் பெயர் விவரங்களைக்கூட தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தொடர்பான ரகசியங்கள் காக்கப்படுகின்றன.